திருநங்கையுடன் இளைஞர் உல்லாசம்... தகராறில் திருநங்கை அடித்து கொலை !
திருவள்ளூர் மாவட்டம் போரூர் தெல்லியார் அரகம் பகுதியை சேர்ந்த 35 வயதான சில்பா என்ற திருநங்கை, போரூர் பகுதியில் தங்கி பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் நின்றிருந்தபோது, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பணம் கொடுத்து அவரை அருகிலுள்ள ஒரு குடோனிற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை அந்த குடோனில் சில்பா மட்டும் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்ட குடோன் காவலாளர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில்பாவை தனிமைக்கு அழைத்துச் சென்ற நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
