பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து திருநங்கை பலி... விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போது விபரீதம்... !

 
திருநங்கை
 

ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக திருநங்கைகள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெண் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ஈஷா மற்றும் ஷர்மி ஆகிய இரு திருநங்கைகளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது உடன் வந்த சில திருநங்கைகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த முத்தரசி (24) என்ற திருநங்கை திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு சாலையில் ஓடி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக போலீஸார் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

போலீஸ்

மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி முத்தரசி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!