மாட்டிக்கிட்ட மாப்பு!! திருட சென்ற இடத்தில் ஹாயாக கால் நீட்டி தூங்கிய திருடன்!!

 
ஏழுமலை

திருட்டு தொழில் செய்பவர்கள் ஏதாவது ஒரு தடயத்தை தங்களுக்கு தெரியாமலே விட்டு சென்றிருப்பர். அதன் மூலம் சிக்கிக் கொள்வது வழக்கம் தான் என காவல்துறையினர் தெரிவிப்பர். ஆனால் திருடனே தன்னை மறந்து திருடச் சென்ற இடத்தில் தூங்கியது புதிதாக உள்ளது . அப்படி ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு வீட்டின்  உரிமையாளர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அந்த நேரம் பார்த்து திருடன் ஒருவன் அவர்கள் வீட்டிற்கு திருடச் சென்றுள்ளான்.

திருட்டு

போதையில் திருட வந்த அவன் திருடி முடித்ததும் அசதியில் கட்டிலுக்கு அடியில் படுத்து தூங்கி விட்டான். வெளியூர் சென்றுவிட்டு வீடு திருப்பியபோது வீட்டிற்குள் யாரோ வந்திருப்பதை கலைந்த பொருட்கள் மூலம் கண்டு கொண்டனர். உடனடியாக பீரோவை செக் செய்ததில் வீட்டில் இருந்த பணம், நகை திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் உள்ள படுக்கையறையில் சென்றுபார்த்தபோது அங்கு கட்டிலுக்கு அடியில் மதுபோதையில் திருடன்  தூங்கிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக  திருடனை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், விழித்த திருடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டான்.

சிறை

இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர்  வீட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய திருடன் 27 வயது ஏழுமலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருடனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ 49000 ரொக்கப்பணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.  திருட சென்ற இடத்தில் மதுபோதையில் குறட்டையிட்டு தூங்கிய ஏழுமலையை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web