கடல்கன்னியை நேரில் பார்த்த பயணிகள்... அதிரவைத்த புகைப்படம்!

கடல் கன்னி வந்து காப்பாற்றுவதை புராண கதைகளில் கேட்டு வளர்ந்த தலைமுறை நாம் ஆனால் நிஜமாகவே இங்கிலாந்தில் உள்ள ஒரு கடற்கரையில் கடல் கன்னியை கண்டதாக பகீர் கிளப்பியுள்ளனர். இது குறித்து 2 பயணிகள் பவுலா ரேகன் மற்றும் அவரது கணவர் டேவ் ரேகன் ஆகியோர் பார்த்துள்ளனர். “மனித எலும்புக்கூடு போலவும், மீன் வாலுக்கான அமைப்பும் கொண்ட அந்த உருவத்தை ஒரு கடற்கன்னி என்கின்றனர். இதனை இவர்கள் இருவரும் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டுக் கொண்டிருந்த போது மணலில் அந்த உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த உருவத்தை பார்ப்பதற்கு பாதி மனிதன் போன்றும் பாதி மீன் போன்றும் இருப்பதால் ஒரு கடல் கன்னி போன்று தோற்றம் அளிப்பதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் அது எலும்பு கூடாக தோற்றம் அளிக்கிறது. இருப்பினும் அழுகிய நிலையில் இல்லை. இது குறித்து அந்த தம்பதிகள் நாங்கள் பார்த்ததாக சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் புகைப்படம் எடுத்ததாக கூறியுள்ளனர்.
Bizarre half-fish, skeleton-like figure found washed up on beach: https://t.co/B5pGAghUhl #weird #creepy #scary pic.twitter.com/m52Rrnbi19
— talker (@talker_news) March 21, 2025
மேலும் இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஏதேனும் கப்பலின் உடைந்த பாகமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் இது நம்ப முடியாத ஒன்றாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் அந்த பயணிகள் கூறியதை கவனத்தில் கொண்டுள்ளதாக கூறியதுடன் இது பற்றி மேலும் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!