உஷார்... விடுமுறை தினத்தில் கொடைக்கானல் டூர் போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த மிரட்டல் அறிவிப்பு!

 
பேரிஜம் ஏரி

தமிழகத்தில் இருக்கும் சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் திகழ்கிறது. கொடைக்கானல் முழுவதும் இயற்கையின் அழகை காணவும், குளு குளு சீசனை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பர். 

மேலும் அங்குள்ள தூண்பாறை, குணாகுகை, ப‌சுமைப‌ள்ள‌தாக்கு, பைன்ம‌ர‌ச்சோலை, மோய‌ர்ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட்பூங்கா, ரோஜாபூங்கா என‌ ப‌ல்வேறு சுற்றுலாத‌ல‌ங்க‌ள் உள்ளன. மேலும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை பெரிதும் க‌வ‌ரும் இடமாக பேரிஜ‌ம் ஏரி, தொப்பி தூக்கிப் பாறை,  அமைதி ப‌ள்ள‌தாக்கு, ம‌திகெட்டான் சோலை சுற்றுலாத் தலங்கள் உள்ளது.

ஆனால், பேரிஜ‌ம் ஏரி, தொப்பி தூக்கிப் பாறை, அமைதி ப‌ள்ள‌தாக்கு, ம‌திகெட்டான் சோலை பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌தால் வ‌ன‌த்துறையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் வருகிறது. இந்த‌ பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் செல்ல‌,  வ‌ன‌த்துறையின‌ரின் அனும‌தி பெற்று அத‌ற்குரிய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட‌ அளவிலான சுற்றுலாப்ப‌யணிக‌ள் சென்றுவர முடியும். 

பேரிஜம் ஏரி

இய‌ற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்கள் மன‌திற்கும், க‌ண்க‌ளுக்கும் புத்துண‌ர்ச்சி அளிக்கும் என்பதை அங்கு சென்ற அனைவரும் உணர்ந்திருப்பர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்ல பெரிதும் ஆர்வம் காட்டுவர்.

இந்நிலையில் வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறுகளில் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தையடுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் பாதுகாப்பு க‌ருதி ம‌று அறிவிப்பு வ‌ரும் வ‌ரை பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டை விதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறை அறிவித்துள்ளது.

பேரிஜம் ஏரி

கொடைக்கான‌ல் பேரிஜம் ஏரிப்பகுதியை காண‌ வ‌ந்த‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ அனும‌தி இல்லாததால் ஏமாற்ற‌ம் அடைந்து திரும்பி செல்கின்றனர். ஒருவேளை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டம் போட்டுள்ள வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள், யானைகள் சென்று விட்டதா, பேரிஜம் ஏரிப் பகுதியை பார்வையிட வனத்துறை அனுமதி அளித்து விட்டதா என அறிந்து அங்கு சென்றால் இயற்கை உங்களை வரவேற்கும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web