தென்மாவட்ட பயணிகளே நோட் பண்ணிக்கோங்க... நாளையும், மறுநாளும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்!

 
ரயில்

 
தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகள் நாளை மார்ச் 6 முதல் 9ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதனையடுத்து   தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

ரயில்

மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.  தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மண்டபம் - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்படும். புதுச்சேரி – சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

ரயில்

சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web