ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உட்பட 14 மாவட்டங்களில் 40 மலையேற்றப் பாதைகள் அடையாளம் காணப்பட்டு 'டிரெக்கிங்' திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இதில் பங்கேற்க 18 வயது நிரம்பியோர் தமிழக அரசின் www.trektamilnadu.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து மலையேற்றத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்து வருகின்றது.
இந்நிலையில், குளிர் காலம் முடிவடைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து காட்டில் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஏப்ரல் 15 வரை தமிழகம் முழுவதும் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!