கவசமே இல்லாமல் தேன் எடுக்கும் பழங்குடியினர்... விநோத வீடியோ!
தேனீக்கள் மிகவும் ஆபத்தானவை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தேன் எடுப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும். ஒரு சில தேனீக்கள் கடித்தாலே பலருக்கு உடல்நிலை மோசமாகிவிடும்.
This community harvests honey without any protective gear at all.
— Gisa w'I Rwanda🇷🇼❤️🇷🇼 (@EmmyGisa3) January 29, 2026
Would you be able to do this job? pic.twitter.com/hA0oaJyBSN
ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள், எந்த பாதுகாப்பு கவசமும் இல்லாமல், வெறும் கைகளால் தேன் கூட்டை கலைத்து தேன் எடுக்கிறார்கள். நூற்றுக்கணக்கான தேனீக்கள் உடல் முழுவதும் மொய்த்தாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்படுகின்றனர்.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சிலர் இதை பார்த்து வியந்துள்ள நிலையில், இது தைரியம் அல்ல, தலைமுறையாக வந்த அனுபவமும் தேனீக்களின் சுபாவத்தை அறிந்த நுட்பமும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அனுபவம் இல்லாதவர்கள் இதை முயற்சிப்பது மிகுந்த ஆபத்தை தரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
