அரிசி திருடியதாக இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கு.. 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!

 
மது

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் 2018 பிப்ரவரி 22 அன்று பழங்குடியின இளைஞர் மது (27) என்பவர், கிராமத்தை சேர்ந்த சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார். பசிக்கிறது என்று கடைகளில் அரிசி அள்ளி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரிசி திருடியதாக கருதி ஒரு கும்பல் அடித்து செய்தது. 

பழங்குடியின இளைஞரின் கொலை சம்பவம் கேரளா மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. கொலைக்கு முன்பாக இளைஞர் மதுவை கட்டிவைத்திருந்த புகைப்படமும் வீடியோவும் வெளிவந்தது. அதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் மதுவின் புகைப்படம் பெரும் உருக்கமாக இருந்தது. 
மது

இதனிடையே, பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கபட்டு உள்ளது. இந்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

நீதிபதியின் தீர்ப்பில், ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகியோரை குற்றவாளி என உள்ளது. இதில் அனீஷ், அப்துல் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கபட்டு உள்ளது. அதன்படி 14 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிக்கபட்டது. 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மன்னார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பதினாறாவது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

மது

அபராதத் தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. பின்னர் அனைவரும் தவனூர் சிறைக்கு மாற்றப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான முனீருக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web