திகிலில் திருச்சி ... நீண்ட காலத்திற்கு பிறகு GUNஐ கையில் எடுத்த காவல்துறை!

 
திருச்சி டிஎஸ்பி

அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லும் வார்த்தை திருச்சி என்றால் திருப்புமுனை. இந்த வாசகம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல ரெளடியிசத்திற்கும் பொருந்தும் திருச்சியும் ரெளடியிசத்திற்கும் அப்படி ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு, காலம்காலமாக இந்த கதை தொடர்கதைதான்.

உப்புப்பாறை ரெத்தினம், சந்திரன், ஒத்தக்கை மதி, தாராநல்லூர் கண்ணன், பாலசுப்பிரமணியம், ராஜபந்தா ராஜூ இப்படி பல்வேறு காலங்களில் பல்வேறு ரெளடிகள் திருச்சியை திகிலில் உறையவைத்த சம்பவங்கள் மிகப்பிரபலம், இந்நிலையில் உதவி ஆய்வாளராக இன்றைய என்கவுண்டர் ஸ்பெஷலிட் என்று அறியப்படும் வெள்ளத்துரை ( தற்பொழுது ஏ.டி.எஸ்.பியாக இருக்கிறார் ) உருண்டை ராஜனை உறையூர் சாலை ரோட்டில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தார் அப்பொழுது முதல் திருச்சியில் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தன, அதன்பின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு துப்பாக்கி சூடுகள் நடந்த வண்ணம் இருந்தன. 

திருச்சி

திருச்சி மாநகர ஆணையராக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்ற காலத்தில் காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்பட அதன்பின்னர்தான் ஓரளவிற்கு ரவுடிகளின் அட்டகாசம் ஒழிந்து அமைதிப்பூங்காவானது திருச்சி என்போரும் உண்டு வெள்ளத்துரை வீரப்பன் என்கவுண்டருக்கு மாற்றல் ஆகி செல்ல திரிபாதியும் சென்னைக்கு சென்றுவிட மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது அவர்களின் அஷோசியேட்கள் என அறியப்பட்ட மண்ணச்சநல்லூர் குணா ( தற்பொழுது சிறையில்) செக்போஸ்ட் ஜெயராமன் ( சமத்துவ மக்கள் கட்சி) பட்டறை சுரேஷ் ( ஐ.ஜே.கே) இப்படி ஆளுக்கு ஒரு திசையில் அரசியல் கட்சிகளில் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

திருச்சி

இந்நிலையில் இரண்டாண்டுகளுக்குப்பின் மீண்டும் இன்று துப்பாக்கி சத்தம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாமா 66 வழக்குகள் இதில் 5 கொலை வழக்குகள்   சம்மந்தப்பட்ட ரவுடி துரைசாமி மற்றும் அவனது சகோதரன் ரவுடி சோமசுந்தரம் என்கிற சாமியின் மீது 20 வழக்குகள் மற்றும்  3 கொலை வழக்குகள் உள்ளன.

ஒரு திருட்டு வழக்கு மற்றும் கஞ்சா கடத்தல் வழக்கு சம்மந்தமாக நேற்று இரவே இருவரையும் காவல்துறை விசாரணைக்கு கொண்டுவந்ததாகவும் அவர்கள் பொருட்களை கொடுத்து வைத்திருந்த அனுராதா என்பவர் வீட்டிற்கு அடையாளம் காட்ட அழைத்துச்செல்லும் வழியில் காவல்துறையினரை தாக்க முற்பட ஜீப்பள்ளத்தில் கவிழ அதனைத்தொடர்ந்து அவர்கள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை எடுத்து காவல்துறையினரை தாக்க முற்பட ஆய்வாளர் மோகன் மற்றும் தலைமை காவலர்கள் சிற்றசு,அசோக் ஆகியோர் காயம் அடையவே துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் கூறுகின்றனர் காவல்துறையினர். தற்பொழுது ரெளடிகள் காவல்துறையினர் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருச்சி

அமைதியாக இருந்த திருச்சியில் மீண்டும் துப்பாக்கி சூடா அப்பவே அம்மா சொன்னாங்க நாங்க ஆட்சிக்கு வந்தால் ரெளடிகள் அண்டை மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள் தமிழகம் அமைதிப்பூங்காவாக மாறிவிடும் என்று அது உண்மைதான் போல தீபாவளிக்குத்தானே பட்டாசு சத்தம் கேட்க கூடாது என்கவுண்டருக்கு கூடவா என காவல்துறையினரிடம் கேட்டால் இப்ப எங்க சார் நெஞ்சுல முடி உள்ள ஆட்கள் எங்கள் துறைக்கு வருகிறார்கள் அப்படியே வந்தாலும் சரி விடுங்க எனக்கூறி விட்டு நடையைக்கட்டினார் சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே என டீக்கடையில் சவுண்டாக ஒலித்தது பாடல்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web