திருச்சி, மதுரை, ஈரோட்டு.. சாலைப் பணிகளுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு... நிதின் கட்கரி அறிவிப்பு!
தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ.87 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை- முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த 6.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த 18.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்துார் - பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த 20.52 கோடி ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி -ஆடலுார் - தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும் என கட்கரி தெரிவித்துள்ளார்.
2025ல் இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!