திருச்சி சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம் துவங்கியது... உற்சாகத்தில் பக்தர்கள் கூட்டம்!

 
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று காலை 10.30 மணிக்கு மேல் துவங்கியது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் தேர் வடம்  பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் முழுவதுமே களை கட்டி உற்சாகத்தில் மிதக்கிறது. காலை 6 மணியளவில் உற்சவ அம்பாள் புறப்பட்டு வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில், 7 மணியளவில் தேர்த்தட்டில் எழுந்தருளினார்.

நாளை ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டம் நிகழ உள்ள நிலையில், உள்ளூர்  மக்கள், இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வசதியாக இன்றும், நாளையும், திருச்சி  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆடி 2வது வெள்ளிக்கிழமை! திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பு கொண்டவை. இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் பகலில் மூலவர் மற்றும் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், மண்டகப்படிகள், இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடந்து வருகின்றன. தேர்த் திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி

மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் திருச்சி மற்றும் சமயபுரத்திற்கு சிறப்பு விழா பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாகனப்போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web