திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்... பக்தர்கள் பரவசம்!

 
ஸ்ரீரங்கம் தேர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் பங்குனித்தேர் உற்சவம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரை பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதும், 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர்த்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது. இவ்வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனித்தேர்த்திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

 திருவிழாவை முன்னிட்டு உற்சவர் அழகிய மணவாளன் தினமும் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மண்டகப்படிகளுக்குச் சென்று வந்தார். உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான நம்பெருமாள்-ரங்கநாயகித்தாயார் சேர்த்திசேவை நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித்தேர் எனப்படும் கோரதப்புறப்பாடு இன்று நடந்தது.

ஸ்ரீரங்கம் தேர்

இதற்கென தாயார் சன்னதி சேர்த்தி உற்சவத்திலிருந்தபடி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 9 மணியளவில் மஞ்சள் சாதராபட்டுடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், கவுஸ்துபம் எனப்படும் நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து தேருக்கு புறப்பட்டார், அங்கிருந்து சித்திரைவீதி வடகிழக்குமூலையில் நின்றிருந்த கோரதத்தில் காலை 9.30 மணியளவில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10 .45 மணியளவில் உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் கோரதம் வடம்பிடிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், கஸ்தூர ரங்கா! காவேரி ரங்கா! என பக்தி பரவசத்துடன் முழங்கியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அடுத்து கீழச்சித்திரைவீதி, தெற்குசித்திரைவீதி, மேலச்சித்திரைவீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகள் வழியாக தேர் ஆடி அசைந்து வந்து மதியம் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாநகர காவல்துறை ஆணையர் சத்ய ப்ரியா உத்தரவுப்படியும் ஆலோசனைப்படியும் உதவி ஆணையர்நேரடி மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தøமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் தேரிலிருந்து பெருமாள் கோயிலுக்கு எழுந்தருள்வார். இரவு சப்தாவரணமும்,நாளை 7ம் தேதி இரவு ஆளும் பல்லக்கு உலாவும் நடந்து பங்குனித்திருவிழா நிறைவுபெறும்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையர்உதவி ஆணையர்  ஆகியோர் தலைமையில், ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள்,கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் தேர்

கோரதம் வழக்கமாக காலை 6.00மணிக்கு வடம்பிடிக்கப்பட்டு 10 மணிக்குள் நிலைக்கு வந்து விடும். ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களினால், தாயார் சன்னதியிலிருந்து பெருமாள் புறப்படவே சற்று தாமதமானதால் காலை 10.45 மணிக்கு மேலாகி விட்டது. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளும் தாமதமாகி தேரோடும் நேரத்தில் மக்கள் வெயிலில் துன்பப்பட நேரிட்டது.

தேரோடும் வீதிகளில் பல்வேறு சேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளில் ஆங்காங்கே தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் ஆகியவை வழங்கப்பட்டன. பல இடங்களில் அன்னதானம் நடந்தது.

கொளுத்தும் வெயிலில் தேரை இழுத்து வந்த பக்தர்களுக்கு பலர் விசிறிவீசி இதமளித்தனர். பக்தர்களுக்கு விசிறி, பழங்கள், குளிர்பானம் போன்றவற்றை சிலர் வழங்கினர். மாநகராட்சி குடிநீர் லாரிகள் தேரோடும் வீதிகளில் நீரைத்தெளித்து பக்தர்களின் பாதங்களை சூடு தாக்காமல் உதவின.

தேருக்கு முன்னாள் திவ்வியபிரபந்த கோஷ்டியினர் நாலாயிர திவ்வியபிரபந்த பாசுரங்களை இசைத்தவாறு சென்றனர். தேருக்கு பின்னாள் வேத பாராயணக்குழுவினர் வந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

 

From around the web