திருச்சியில் பயங்கரம்: தங்கையின் காதலன் உயிரிழந்த விவகாரத்தில் பழிவாங்கல் - வாலிபர் வெட்டிக்கொலை!
திருச்சி: தென்னூர் பாலன் நகர் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 26 வயது வாலிபர் சந்துரு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெரு அருகே உள்ள பாலன் நகரைச் சேர்ந்த சந்துரு (26), தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்துருவைச் சரமாரியாக வெட்டினர்.

தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்த சந்துரு, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்ட சந்துருவின் தங்கையைப் புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்து வந்துள்ளார். சில காலத்திற்கு முன்பு அந்த வாலிபர் திடீரென உயிரிழந்துள்ளார். தனது சகோதரனின் மரணத்திற்குச் சந்துருதான் காரணம் என அந்த வாலிபரின் தம்பி கருதியுள்ளார்.
இந்த முன்விரோதம் காரணமாக, உயிரிழந்த காதலனின் தம்பி மற்றும் அவரது நண்பர் இணைந்து சந்துருவைப் பழிவாங்கத் திட்டமிட்டு இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
