திருச்சி : 200 பெண் காவல் ஆளிநர்களுடன் மகளிர் தின விழா.. களை கட்டிய மாநகர காவல் ஆணையரகம்!

 
சத்தியபிரியா

தமிழக காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையரகத்தில் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவல் அதிகாரிகள் மற்றம் பெண் காவல் ஆளிநர்களுடன் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

மகாகவி பாரதியார் அவர்களின் கவிதை வரிக்கு முன்னுதாரணமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.M.சத்தியப்பிரியா, அவர்களின் தலைமையில் இன்று  திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில், மாநகரத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பெண் காவல் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்ட "உலக மகளிர் தின விழா" சிறப்பாக நடைபெற்றது.

மகளிர் தின விழாவில் காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்கள் உள்ள தடைகளை களையவும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பாரிபுரியும் பொர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும், ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்க வேண்டும் என அறியுறுத்தப்பட்டது.

சத்தியப்பிரியா

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்புரையில், "சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டும், தமிழக காவல் துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், ஆண்களுக்கு இணையாக காவல் துறையில் பெண்களும் பணிபுரிந்து வருவதாகவும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பளாராக பெண் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, புகார்களுடன் வரும் நபர்கள் தெரிவிக்கும் பிரச்னைகளை கனிவோடு கேட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக காவல் நிலையங்களில் வரவேற்பாளராக பெண்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே தமிழக காவல் துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சிறப்பாக 'பணியாற்றி இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடி மாநிலமாக நிகழ்வதாகவும், மேலும் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாகவும், பல சமூக கட்டமைப்புகளில் பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும், காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, வேறு பணிகளில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்க வேண்டும்

சத்தியப்பிரியா

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாக இலவச உதவி எண்கள்: 1091 மற்றும் 181 மூலமாகவும் மற்றும் காவல் உதவி செயலியை (Kaval Uthavi App) தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களது அன்றாட பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை ஆணையர்கள் வடக்கு, தெற்கு சரகம், காவல் பெண் அதிகாரிகள் மற்றும் 200 பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web