2 நாட்களுக்கு மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் ‘ரெட் ஜோன்’களாக அறிவிப்பு!
சென்னை மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகளில் வரும் 28.02.2026 மற்றும் 01.03.2026 ஆகிய இரு நாட்களுக்கு ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. VVIP வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் மற்றும் தொடர்புடைய வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு ஏற்பாடுகளைத் தவிர எந்த வகையான ட்ரோன் கேமரா மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளையும் இயக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டின் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் 19.02.2026 முதல் 19.04.2026 வரை சென்னை பெருநகரம் முழுவதும் ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு வான்வழி கருவிகளை பறக்க விட தடை ஏற்கனவே அமலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
