விஜய் படத்திற்கு சிக்கல்… மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

 
விஜய்
 

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை கவலை அளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள பதிவில், அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் கூறியுள்ளார். அரசியல் லாபத்திற்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதம் அடைந்துள்ளதாகவும், இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதியாகும் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு எதிராக அல்ல, அரசியல்வாதி விஜய்க்கு எதிராக உங்கள் சக்தியை காட்டுங்கள் என்றும் கூறிய அவர், மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!