துணை முதல்வர் வருவதில் தாமதம்.... … பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்குவதில் சிக்கல்
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று பாலமேட்டில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கவிருந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருந்தார்.

ஆனால், துணை முதல்வர் வருகை தாமதமானதால் போட்டி இரண்டு மணி நேரம் தள்ளிப்போனது. இதையடுத்து காலை 9 மணிக்கு போட்டி தொடங்கும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்தப் போட்டியில் சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். 12 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 1,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து, தேவையெனில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
