லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி.!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!