மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து... டிரைவர் பலி!

 
மதுபாட்டில்

கர்நாடகாவில் இருந்து லாரியில் அதிகாலை கேரளாவின் எர்ணாகுளத்திற்கு மதுபானம் கொண்டு செல்லப்பட்டது. லாரியை அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றார். கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த காரின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுபாட்டில் லாரி

இந்த விபத்தில் லாரி டிரைவர் அகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரியில் ஏற்றிச் சென்ற 700 பெட்டிகளில் இருந்த மதுபான பாட்டில்கள் உடைந்து, மது சாலையில் ஆறாக ஓடியது.

போலீஸ்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த கார் டிரைவரை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த அகிலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!