நடுரோட்டில் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி!

 
தீப்பிடித்து எரிந்த லாரி

தூத்துக்குடி மாவட்டத்தில்  இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆரணி வழியாக நேற்றிரவு வேலூர் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.  வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது திடீரென லாரியின் டயர் வெடித்ததாகவும் இதனால் லாரி கணியம்பாடி அரசுப் பள்ளி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றி வெடித்துள்ளது. சாலையில் கொட்டிய டீசலும் பற்றி எரிந்துவிட்டது.  

விபத்து

இதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரை நோக்கி தீ செல்வதை கண்ட கார் உரிமையாளர் விரைவாக செயல்பட்டதால் கார் மற்றும் இருசக்கர வாகனம் தப்பியுள்ளது. மேலும் லாரி ஓட்டுநர் தப்பி செல்லும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.  இதனை அறிந்த ஓட்டுநர் லாரியில் இருந்து தாவி குதித்து தப்பி ஓடிவிட்டார்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

விபத்து

சம்பவ இடத்துக்கு வந்த  காவல்துறையினர் சாலையின் நடுவே எரிந்து நாசமான லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் ஆரணி வேலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இந்த விபத்து  குறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பிஓடிவிட்ட ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது