பைக் மீது லாரி மோதி கோர விபத்து... உடல் நசுங்கி திமுக நிர்வாகி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
விபத்து

சென்னையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பலியான சம்பவம் திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். கட்டிட ஒப்பந்ததாரர். அவரது மகன் மோகன கிருஷ்ணன் (32). கால் டாக்ஸி ஓட்டுநர். திமுக 106-வது வட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் மோகன கிருஷ்ணன் பதவி வகித்து வந்தார்.

விபத்து

இந்நிலையில் தனது நண்பர் கேசவனுடன் சேர்ந்து மோகன கிருஷ்ணன், இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே 100 அடி சாலையில் இவர்கள் மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஒரு லாரியை முந்த முயன்றபோது வாகனம் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். லாரியை முந்தி செல்ல முயன்றதில், பின்னால் வந்துக் கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் சிக்கிய மோகன கிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கேசவன் படுகாயம் அடைந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்த கேசவனை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மோகன கிருஷ்ணனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் சுதாகர் கைது செய்து, தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!