ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடியும்... டாவோஸில் ட்ரம்ப் அதிரடி பேச்சு!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது ஆண்டு உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பல மாநில முதல்வர்களும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ரஷியா–உக்ரைன் போர் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார். ஜெலன்ஸ்கி மற்றும் புதின் இடையே வெறுப்புணர்வு இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். இதற்கு முன்பு 8-க்கும் மேற்பட்ட போர்களை தான் நிறுத்தி வைத்ததாகவும், சில போர்களை மணிநேரங்களில் தீர்த்து வைத்த அனுபவம் உண்டு என்றும் அவர் கூறினார்.

ரஷியாவும் உக்ரைனும் போர்நிறுத்தத்தை விரும்புகின்றன என்றும், அதற்கான தீர்வுக்கு அமெரிக்கா நெருங்கி விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலுக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளே முதற்காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 2022-ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் மூன்றாண்டுகளை கடந்தும் தொடர்வதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
