டிரம்ப் தங்க அட்டை... அமெரிக்க குடியுரிமை பெற 9 கோடி... !

 
ட்ரம்ப்
 

அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய “டிரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். கிரீன் கார்டு போலவே இது அமெரிக்க குடியுரிமையை வழங்கும் ஆனால் அதனைவிட சிறந்த வாய்ப்புகளை தரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், டிரம்ப் தங்க அட்டை பெற ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 9 கோடி) நன்கொடை அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் பின்னணி சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே அட்டை வழங்கப்படும். மேலும், டிரம்ப் கார்ப்பரேட் தங்க அட்டை மூலம் செல்லும் ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் (ரூ. 18 கோடி) மற்றும் டிரம்ப் கார்ப்பரேட் பிளாட்டினம் அட்டைக்கு 5 மில்லியன் டாலர் (ரூ. 45 கோடி) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிறப்புரிமை குடியுரிமை குறித்து டிரம்ப் தெரிவித்த போது, அமெரிக்காவில் பிறப்புரிமை என்பது உள்ளூர் குடிமக்களுக்கு மட்டுமே என்பதையும், வெளிநாடுகளிலிருந்து பணக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். டிரம்ப் திட்டத்தின் நோக்கம், அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்பும் பணக்கார வெளிநாட்டு நபர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குவதாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!