டிரம்ப் வலது கையில் பேண்டேஜ்... வெள்ளை மாளிகை விளக்கம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (79) உலக அரசியல் அரங்கில் பரபரப்பானவர். அவர் பதவி ஏற்றது முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது உடல்நலம் குறித்துப் பல செய்திகள் பரவின. அவர் முன்பு போல் செயல்பட முடியவில்லை என்று தகவல்கள் வந்தன. ஆனால், டிரம்ப் அதை மறுத்தார். செய்தி நிறுவனங்கள் தவறான தகவல் பரப்புகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Q: Can you explain what's going on with the bandages on Trump's hand?
— Aaron Rupar (@atrupar) December 11, 2025
LEAVITT: We've given you an explanation. The president is literally constantly shaking hands. pic.twitter.com/np2SYrUgsD
இந்த நிலையில் டிரம்ப்பின் வலது கையின் மேல் பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. காயத்திற்குப் போடும் இந்த பேண்டேஜ் பற்றி பல யூகங்கள் கிளம்பின. டிரம்பின் உடல்நல பாதிப்பு பற்றி பல வாரங்களாக யூகங்கள் இருந்தன. இந்த பேண்டேஜ் விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. டிரம்ப் அந்தப் பேண்டேஜ் வெளியே தெரியாமல் மறைக்க முயன்றார்.
தோலின் நிறத்திற்கு ஏற்ற மேக்-அப் சாதனத்தைப் பயன்படுத்தியும் மறைக்கப் பார்த்தார். ஆனால், சமூக ஊடகப் பயனாளிகள் அதைச் சரியாகக் கவனித்தனர். இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்டேஜ் உள்ள அவரது கையைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்தார். "இதில் கவலைப்பட வேண்டியது எதுவும் இல்லை" என்று அவர் கூறினார். "டிரம்ப்பின் கடுமையான வேலைப்பளுதான் காரணம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "அவர் தினமும் பலரைச் சந்திக்கிறார், கைகுலுக்குகிறார். அதனால் தான் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம்" என்றார். அவர் தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்து எடுத்து வருவதால் கூட இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் லீவிட் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
