ஜி7 மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார் டிரம்ப்!

 
ட்ரம்ப்

ஜி7 மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் பாதியிலேயே திரும்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜி 7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர்  டிரம்ப், மாநாடு முழுவதுமாக  பங்கேற்காமல், பாதியிலேயே அவசரமாக நாடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட் "ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ட்ரம்ப்

 மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால், உச்சிமாநாட்டு பயணத்தை முடித்து விட்டு இன்றிரவே வெள்ளை மாளிகை திரும்புகிறார்" என பதிவிட்டுள்ளார். 

கனடா பயணத்தை பாதியில் முடித்து விட்டு திரும்புவதற்கு முன் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில், "நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது.  மனித வாழ்க்கை தான் வீணாகிறது.

ட்ரம்ப்

இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனே டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா திரும்பும் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள அவசரகால அறையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை தயாராக இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளன. 
 

இந்நிலையில், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் பங்கர் - பஸ்டர் குண்டுகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென வெள்ளை மாளிகை திரும்பியிருப்பது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது