ஈரான் போர் குறித்து ட்ரம்ப்–புதின் ஒரு மணி நேரம் தொலைபேசியில் ஆலோசனை!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் போர், உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவ விருப்பம் இருப்பதாக புதின் தெரிவித்ததாகவும், அதே நேரத்தில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக டிரம்ப் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!