சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட முடியாது.... ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

 
ட்ரம்ப்
 

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஐநா காலநிலை மாற்ற ஒப்பந்தம் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளார். “சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்” என்ற அவரது பேச்சு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேசிய நலன்களே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐநா காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிய பின்னடைவு என விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே முதல் ஆட்சிக் காலத்தில் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் வெளியேறியது நினைவுகூரப்படுகிறது. இப்போது 66 அமைப்புகளில் இருந்து விலகுவது அமெரிக்காவை தனிமைப்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஐரோப்பிய யூனியன், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

சர்வதேச ஒப்பந்தங்கள் அமெரிக்காவுக்கு சுமை என ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்றார். WTO, WHO போன்ற அமைப்புகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது. “America First” கொள்கையே இதற்கு காரணம் என ட்ரம்ப் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த முடிவுகள் உலக அரசியலில் புதிய பதற்றத்தை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!