உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி டிரம்ப் அதிரடி… இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரி!

 
ட்ரம்ப்

 

அமெரிக்கா உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், டிரம்ப் நிர்வாகம் முன்பு விதித்த சில இறக்குமதி வரிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 18% வரி 10% ஆக குறைந்தது. ஆனால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார். “இந்த தீர்ப்பு நாட்டின் நலனுக்கு எதிரானது” என அவர் தெரிவித்தார்.

மோடி ட்ரம்ப்

1974ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122ன் கீழ் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இந்த சட்டம் அரசுக்கு 150 நாட்கள் வரை 15% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கிறது. புதிய 10% வரி மூன்று நாட்களில் அமலுக்கு வரும் என்றும் கூறினார். “நான் விதித்த வரிகள் முழு வேகத்தில் தொடரும்” என அவர் வலியுறுத்தினார்.

ட்ரம்ப்

இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 18% இலிருந்து 10% ஆக குறைந்த வரி, புதிய 10% மூலம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!