ஈரானுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப் ..... புகைப்படம் வெளியிட்டு எச்சரிக்கை!
ஈரானில் அயோதுல்லா அலி காமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணவீக்கம் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருளாதார தேக்கநிலை காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.
போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை தடுக்கும் வகையில் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. நார்வேயை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு, போராட்டத்தில் 3,428 பேர் உயிரிழந்ததாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் அரசு தொலைக்காட்சியில் டிரம்பின் காயத்துடன் கூடிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. “இந்த முறை குறி தப்பாது” என்ற வாசகமும் அதனுடன் பகிரப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க தாக்குதல் ஏற்பட்டால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
