25,000 பேர் பலி... போதும் நிறுத்துங்கள்... 3 ம் உலகப் போர் வெடித்துவிடும் ! உக்ரைன் போருக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி அவர் பேசினார். "கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர்" என்று டிரம்ப் தெரிவித்தார். குண்டு வீச்சால் பொதுமக்களும் பலியாகி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். "இந்தக் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்காக அமெரிக்கா கடுமையாக உழைத்து வருகிறது" என்று டிரம்ப் கூறினார்.

"இதுபோன்ற விஷயங்களால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் ஆபத்து உள்ளது" என்றும் டிரம்ப் எச்சரித்தார். "ஒவ்வொருவரும் ஆபத்தான விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இதுவே மூன்றாம் உலகப்போரில் கொண்டு சென்று விட்டுவிடும். அதை நாம் பார்க்க விரும்பவில்லை" என அவர் கவலை தெரிவித்தார். இந்த போர் முடிவுக்கு வருவதில் காணப்படும் மெதுவான முன்னேற்றம் டிரம்பை மிகவும் விரக்தியடையச் செய்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் இதுகுறித்து பேசினார். "நான்கு ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயல்கிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாததால் டிரம்ப் சோர்வடைந்து விட்டார்" என்று அவர் கூறினார். "அவர் இனியும் பேச விரும்பவில்லை, நடவடிக்கை வேண்டும் என நினைக்கிறார்" என்று லீவிட் தெளிவுபடுத்தினார். போரை நிறுத்த அவர் ரஷ்ய அதிபர் புதினுடனும் பேசினார். ஆனால், ரஷ்யா போரை நிறுத்தவில்லை. இந்தப் போர் மூன்றாம் உலகப்போரில் கொண்டு சென்று விட்டு விடும் என டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
