ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை! " ஈரான் மீண்டும் கத்தாரைத் தொட்டால் உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் தரைமட்டமாகும் ... வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்.!
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையத்தை அமெரிக்கா தரைமட்டமாக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் கத்தாரின் ராஸ் லஃபான் எரிசக்தி மையம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலாகக் கருதப்படுகிறது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நலன்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க எத்தகைய கடுமையான நடவடிக்கையையும் எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், கத்தாரின் எரிசக்தி நிலையங்கள் மீண்டும் தாக்கப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தையே முடக்கிவிடும் என அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப்பெரிய போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே ஈரானின் முக்கியத் தலைவர்களை அமெரிக்கா குறிவைத்து அழித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பேச்சு ஈரானியத் தலைமையைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. "எங்கள் நட்பு நாடுகளையோ அல்லது உலகப் பொருளாதாரத்தையோ சீர்குலைக்க நினைப்பவர்கள் அதற்கான விலையைத் தந்தே ஆகவேண்டும்" என டிரம்ப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஈரான் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை மிகவும் எச்சரிக்கையுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
