வெனிசுலாவுக்குள் புகுந்து 'கெட்டவர்கள் மீது விரைவில் தாக்குதல்' - ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டிரம்ப், போதைப்பொருள் கடத்தல்காரர்களை இலக்கு வைத்து, வெனிசுலா நாட்டுக்குள் புகுந்து விரைவில் தாக்குதல் நடத்தவிருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த அச்சுறுத்தல், அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே பதற்றமான நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கக் கடற்படை ஏற்கனவே கரீபியன் கடற்பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் படகுகளைத் தாக்கி அழித்தது. இதன் மூலம் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

நேற்று நடந்த மந்திரி சபைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், தனது அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசினார்: "வெனிசுலாவுக்குள் வாழும் 'கெட்டவர்களை' (போதைப்பொருள் கடத்தல்காரர்கள்) தாக்கி அழிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளும். நிலம் வழியாகக் கூட நாங்கள் இந்தத் தாக்குதலைத் தொடங்க உள்ளோம். நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவது எங்களுக்கு எளிது. அவர்கள் எந்தப் பகுதியில் வசிக்கிறார்கள், கெட்ட மனிதர்கள் வசிப்பிடம் எது என எங்களுக்கு நன்றாகத் தெரியும். விரைவில் நாம் தாக்குதலைத் தொடுக்க உள்ளோம்."

டிரம்ப்பின் இந்தப் பேச்சு, வெனிசுலா நாட்டுக்குள் புகுந்து அமெரிக்கா ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் மேலும் ஒரு மோதலை உருவாக்கி, நிலைமையை இன்னும் மோசமாக்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
