டிரம்ப் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் கோளாறு!

 
ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானம் ஒரு மணிநேரத்தில் திரும்பி வந்தது. விமானத்தில் சிறிய மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாற்று விமானமான ஏர் ஃபோர்ஸ் சி-32 மூலம் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஸ்விட்சர்லாந்துக்கு புறப்பட்டனர். இந்த விமானம் உள்நாட்டு மற்றும் சிறிய விமான நிலையப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒன்று என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!