கிறிஸ்துமஸுக்கு அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு டிரம்ப் பரிசு!

 
ட்ரம்ப்
 

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா 1,776 டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 1776ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொலைக்காட்சி உரையில் பேசிய டிரம்ப், இந்த தொகையை கிறிஸ்துமஸ் பரிசாகவே பார்க்கலாம் என்றார். ராணுவ வீரர்களே இதற்கு முழு தகுதி உடையவர்கள் என்றும், செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இந்த அறிவிப்பு ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trump Warrior Dividend

இந்த தொகை இறக்குமதி வரிகள் மூலம் கிடைத்த கூடுதல் வருவாயில் இருந்து வழங்கப்படுவதாக டிரம்ப் விளக்கம் அளித்தார். ராணுவ வீரர்களின் குடும்பங்களும் இந்த உதவி கிறிஸ்துமஸுக்கு பெரிய ஆதரவு என தெரிவித்துள்ளனர். டிரம்ப் அரசு ராணுவத்திற்கு முன்னுரிமை அளிப்பதை இந்த அறிவிப்பு மீண்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!