ஜெஃப்ரி எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை... ட்ரம்ப் திட்டவட்டம்!
டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதையும் மறைக்கவில்லை என்றும், தன்னை முழுமையாக விடுவித்துவிட்டார்கள் என்றும் கூறினார். சமீபத்தில் வெளியான எஃப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் சில இடங்களில் இடம்பெற்றிருந்தாலும், அது குற்றச்சாட்டுகளுடன் தொடர்பில்லையென அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு எஃப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. மேலும், எஃப்ஸ்டீன் தன்னை அதிபராக வர விடாமல் முயன்றதாகவும், தற்போது அரசியல் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் தன்னுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை என்றும், அமெரிக்க மக்கள் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், முன்னாள் வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில், எஃப்ஸ்டீன் கோப்புகளை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும், இது மறைப்பு முயற்சி என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இனி புதிய கோப்புகள் வெளியிடப்படாது என்று அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
