ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த தடை... ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

 
trump trump

பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலால் தொடங்கிய மேற்காசியப் போர், தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதலில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், போரை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்'  வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு, சர்வதேச அரங்கில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் டிரம்ப் தெரிவித்துள்ளார். "மத்திய கிழக்கில் நிலவும் நமது பகைமைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட உள்ளது. இந்த விரிவான பேச்சுவார்த்தைகள் வாரம் முழுவதும் நீடிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப் பாதுகாப்புத் துறைக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் தரப்பிலிருந்து பதில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்த நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. "இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி" என டிரம்ப் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதே தங்களின் இறுதி இலக்கு என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த 5 நாள் கால அவகாசத்திற்குள் எட்டப்படும் முடிவுகளைப் பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதி அமையும் என்பதால், உலகமே இந்தப் பேச்சுவார்த்தையை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!