ஈரான் மீது நள்ளிரவில் தாக்குதல்?... 'ஒட்டுமொத்த நாடும் இன்றுடன் அழியும்' ... ட்ரம்ப் விடுத்த அதிரடி மிரட்டல்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையிலான கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானில் பிணைக் கைதியாக இருந்த அமெரிக்க வீரர் மீட்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரானின் பிடிவாதப் போக்கைக் கடுமையாகச் சாடினார். "ஒட்டுமொத்த ஈரானையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும், அந்த இரவு ஒருவேளை இன்றைய இரவாகக் கூட இருக்கலாம்" என அவர் கூறியுள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில் பேசிய டிரம்ப், ஈரான் தனது போக்கைத் மாற்றிக் கொள்ளாவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிடம் இனி மின்சாரமே இருக்காது என அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த ஆக்ரோஷமான பேச்சால், இன்று இரவு ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் உச்ச தலைவர் சுயநினைவின்றி இருப்பதாக வெளியாகும் தகவல்கள் அந்நாட்டிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. போர் மூண்டால் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!