அமெரிக்காவில் இந்தியாவை போல தேர்தல் நடத்தனும்... டிரம்ப் புதிய உத்தரவு!

 
டிரம்ப்  

 
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இந்த  வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் இருப்பதாகவும்  இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகளை போல அமெரிக்காவிலும் கொண்டு வர வேண்டும் என   அதிபர்  டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை டிரம்ப்  மார்ச் 25ம் தேதி  பிறப்பித்தார்.

 

அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பொதுத் தேர்தல்கள் என்பது இந்தியாவை போல நாடு முழுவதும் ஒரே தேர்தல் விதிகள் என்றில்லாமல், மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுவதால், விதிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக மாறுபட்டு வருகிறது. அதனை மாற்றியமைத்து ஒருங்கிணைந்த மாற்றங்களை இந்திய தேர்தல் நடைமுறையுடன் ஒப்பிட்டு வழிவகுத்துள்ளார்  டிரம்ப்.
டிரம்ப்

அமெரிக்காவில் வாக்காளர்கள் தாங்களாகவே முன்வந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை நேரடி அலுவலகங்கள் அல்லது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் குறிப்பிட்ட மாநிலங்களில் தான் அமெரிக்க குடியுரிமை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் ஆவணச் சான்று கட்டாயமில்லை.
 

36 மாநிலங்களில் வாக்களிக்கும் போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை கேட்கப்படுகிறது. சில மாநிலங்களில் மட்டுமே புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் எனும் கடுமையான தேர்தல் விதிகள் உள்ளன.
அஞ்சல் வாக்குகளை பொறுத்தவரை சில மாநிலங்களில் மட்டுமே கையொப்பம் சரிபார்க்கப்படுவதாகவும்  பல மாநிலங்களில் கூடுதல் அடையாளச் சான்றுகள் தேவையில்லை எனவும் அங்கு கையெழுத்தும் சரிவர பரிசோதிக்கப்படவில்லை எனவும் கூறுகிறார். 

 

தேர்தல் நாளுக்குப் பிறகு வந்த அஞ்சல் வாக்குகளை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்கின்றன. சில மாநிலங்கள் அதனை ஏற்பதில்லை.
டிரம்ப்

இதில் அதிபர் டிரம்ப் பிறப்பித்த புதிய நிர்வாக உத்தரவின் படி, வாக்காளர் பதிவின் போது பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம்.  
 

தேர்தல் நாளுக்குப் பிறகு வந்த அஞ்சல் வாக்குகள் எண்ணப்படாது  மாநிலங்கள், அமெரிக்க குடியுரிமை இறப்பு சான்றுகள் உள்ளிட்ட மத்திய தரவுத்தளங்களை பயன்படுத்தி வாக்காளர்களின் தகுதியை சரிபார்க்க வேண்டும். அதனை மீறும் மாநிலங்களுக்கு மத்திய அரசில் இருந்து தரப்படும் நிதி நிறுத்தப்படும்.
 

அஞ்சல் வாக்குகளை குறைத்து, நேரடி வாக்கு மற்றும் காகித வாக்குச் சீட்டுகளை ஊக்குவிக்கும் வகையில்  புதிய விதிகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web