ட்ரம்ப் அடுத்தடுத்து அதிரடி... ஒரே மாதத்தில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் நீக்கம்... !

 
 ட்ரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக, டொனால்டு டிரம்ப்  பதவியேற்று கொண்ட நாள் முதல் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி  அரசு நிர்வாகத்தில் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீரமைக்கவும், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறையை உருவாக்கியுள்ளார். இதன் தலைவராக, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்தத் துறை, ஏற்கனவே, பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை விடுமுறையில் செல்ல அறிவுறுத்தியிருந்தது. அதே நேரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

 ட்ரம்ப்
அப்போது, மார்ச் 13ம் தேதிக்குள், தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர், வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.  இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாக  டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு அரசு துறையும், தங்கள் ஊழியர்களில் எத்தனை பேரை வேலை நீக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்ற எலான் மஸ்க் அதிகமான செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த ஆண்டில் பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர்கள் திட்டங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்நிலையில்  பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்  திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அரசு ஊழியர்களில் 1 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web