ட்ரம்ப் எச்சரிக்கை... நாடு கடத்தப்படுவீர்கள்... அமெரிக்க வெளிநாட்டினருக்கு 30 நாட்கள் கெடு!

 
 ட்ரம்ப்

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாமல்  வெளிநாட்டினர், ஏப்ரல் 11ம் தேதிக்கு பிறகு 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். நியூயார்க், அமெரிக்காவில் ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கியுள்ளார்.  சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.  

ட்ரம்ப்

சமீபத்தில் சீனா உட்பட  பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார் இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய தவறினால், அது குற்றம். அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்  அவர்கள் ஒரு போதும் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது எனவும்  வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் திட்டவட்டமாக கூறியுள்ளார். 
இதன்படி  விசா வைத்திருப்போர், கிரீன் கார்டு பெற்றவர்கள் மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்ற தனிநபர்கள் என அவர்கள் முன்பே பதிவு செய்யப்பட்டவர்கள் என பரிசீலிக்கப்பட்டவர்கள்  யாராக இருந்தாலும் அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்து நிரூபிக்கப்படும் வகையில் எல்லா நேரங்களிலும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என புதிய விதி தெரிவிக்கின்றது.

ட்ரம்ப்

அதே போல்  14 வயது நிறைவடையும் குழந்தைகளும் கட்டாயம் மறுபதிவு செய்து கொண்டு, கைவிரல் ரேகைகளை அவர்களுடைய பிறந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர், ஏப்ரல் 11ம் தேதிக்கு பிறகு  30 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  புலம்பெயர்வோருக்கான உரிமைகள் குழு  விமர்சகர்கள், இந்த புதிய பதிவு விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web