ஆருத்ரா ஸ்பெஷல் திருவாதிரைக் களி, 7 கூட்டுக்கறி இப்படி செய்து பாருங்க... டேஸ்ட் அள்ளும்!

 
திருவாதிரைக் களி கூட்டுக்குழம்பு
இன்று ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா தரிசனத்தைக் காண பக்தர்கள் பரவசத்துடன் குவிந்து வருகின்றனர். நடராஜரை தரிசனம் செய்வதுடன் நமது வீட்டிலேயும் அவருக்கு திருவாதிரை களி செய்து படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

திருவாதிரையில் நடராஜரை தரிசித்து வீடுகளில் களியும், கூட்டுக்கறியும் படையலிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்திட தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.

மார்கழி பௌர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே ஆருத்ரா தரிசனம். இந்த நாளில் ஆலயம் சென்று நடராஜரை தரிசிப்பதுடன் வீடுகளில் திருவாதிரைக் களியும்,  7 கறி கூட்டுக்குழம்பும்  சேர்த்து படையல் இடுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருவாதிரைக் களியை மிக மிக எளிதாக சிறிது நேரத்திலேயே  வீட்டிலேயே செய்து விடலாம். 

ஆருத்ராவிற்கு வீட்டிலேயே திருவாதிரை களி !! இப்படி செய்து பாருங்க!!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 250கி
வெல்லம் - 300கி
பாசிப்பருப்பு - 50கி
ஏலக்காய் - 3
முந்திரி - 10
தேங்காய் - 1/2மூடி 
நெய் - 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் அரிசி, பருப்புகளை தனித்தனியே வாசம் வரும் வரை  மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். சிறிது ஆறிய பின் மிக்சியில் ரவை பதத்தில் உடைத்து வைக்கவும்.

வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதி வந்ததும் அத்துடன்  உடைத்த அரிசி, பருப்பு ரவையைச் சேர்த்து கிளற வேண்டும்.முக்கால் பதம் வெந்த உடன்  நெய், தேங்காய்த்துருவல் சேர்க்க வேண்டும். நன்றாக வெந்த உடன் முந்திரியை நெய்யில் வறுத்து  ஏலப்பொடி தூவி இறக்க வேண்டும். 
திருவாதிரை களி தயார். அதன் பின்னர் 7 கறி கூட்டு

திருவாதிரை 7 கறி கூட்டு

தேவையானபொருட்கள்

7 கறி கூட்டுக்குழம்பு
திருவாதிரைக் களியை பச்சரிசி, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து செய்வது போல் இந்த தாளகக் குழம்பை நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்ய வேண்டும். இந்த காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் அமைவது கூடுதல் சிறப்பு. 

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய், வாழைக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், பூசணிக்காய் என அனைத்து காய்கறிகளும் சேர்ந்து  - 300கி 
புளி- எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1சிட்டிகை
பச்சை மிளகாய் - 1
வெல்லம்- சிறிதளவு 

வறுத்து அரைக்க 

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
கருப்பு எள் - 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய்-1/4 மூடி 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை 

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1ஆர்க்கு 

செய்முறை

வெறும் வாணலியில் பச்சரிசி, எள் இவைகளை வாசம் வறும் வரை வறுக்க வேண்டும். இதன் பிறகு சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய், கடலைபருப்பு, தனியா, தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். பச்சரிசியையும், எள்ளையும் தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும்.அனைத்து காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை மிளகாயுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவேண்டும்.

பாதி வெந்து வந்த உடன் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.  காய்கள் நன்றாக வெந்ததும் அரைத்த விழுது மற்றும் வெல்லத்தினையும் சேர்த்துக் கொதிக்க  விடவேண்டும். கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.  திருவாதிரை தாளகக் குழம்பு தயார். திருவாதிரைக்களியுடன் இந்த7 கறி கூட்டுக்குழம்பும் சேர்த்துப் படையல் போட வேண்டியது தான்.  களிக்கு இந்தக் குழம்பைத் தொட்டு சாப்பிடலாம். சுவையும் அபாரமாக இருக்கும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web