இன்று நவ.6 கூட்டப்புளி கடற்கரையில் சுனாமி ஒத்திகை பயிற்சி... கலெக்டர் தகவல்!

 
மழை மீட்பு பணி
இன்று நவம்பர் 6ம் தேதி கூட்டப்புளி கிராமம் கடற்கரை பகுதியில் சுனாமி மற்றும் வெள்ளகால பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. பருவமழை காலத்தினை எதிர்கொள்ளும் வகையிலும், பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை மீட்பது தொடர்பாகவும், ஒத்திகை பயிற்சி நவம்பர் 6ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் வைத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF), திருநெல்வேலி மாநகர, மாவட்ட காவல் துறை அலுவலர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளது. 

தேசிய பேரிடர் மீட்பு படையினர்

அதனை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF) காவல் துறையினர், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆகியோர் தாங்கள் வைத்துள்ள மீட்பு கருவிகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளனர். 

எனவே, மேற்காணும் பேரிடர் ஒத்திகை பயிற்சியினையும் மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளின் கண்காட்சியினையும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியர் கலெக்டர் கார்த்திகேயன்

அதே போன்று இன்று நவம்பர் 6ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இராதாபுரம் வட்டம், கூட்டப்புளி கிராமம், கடற்கரை பகுதியில் வைத்து சுனாமி மற்றும் வெள்ளகால பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை பயிற்சி மேற்படி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF) காவல் துறையினர், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.

மேற்படி ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web