அதிர்ச்சி !! பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை!!

பிரான்சின் நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வனுவாட்டு தீவில் 10 அடி உயரத்திற்கு கடல் அலை மேலெழும்பக் கூடும் எனவும், Fiji, New Caledonia, Kiribati மற்றும் New Zealandல் அதை விட குறைவான அலையும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tsunami Info Stmt: M7.7 Loyalty Islands Region 1957PDT May 18: Tsunami NOT expected; CA,OR,WA,BC,and AK
— NWS Tsunami Alerts (@NWS_NTWC) May 19, 2023
#NTWC
பசிபிக் பெருங்கடலின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் நியூ கலிடோனியா தீவுகள் 3 நிர்வாக பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நியூ கலிடோனியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் நியூ கலிடோனியாவின் கிராண்டே டெர்வேவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவில் 2 வது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது முந்தைய நிலநடுக்கத்தை காட்டிலும் சக்தி குறைந்ததாக உள்ளது. மேலும் லாயல்டி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் லாயல்டி தீவில் 2 வது நாளாக 2வது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 45 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!