அரசு கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - டிடிவி தினகரன் கண்டனம்!

 
டிடிவி தினகரன், ஸ்டாலின்

நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கல்விக்கூடத்திற்குள் இத்தகைய கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியின் கீழ் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதை இது காட்டுவதாகச் சாடியுள்ளார். மாணவர்கள் கல்வி பயில வரும் புனிதமான இடத்தில், நீண்ட காலமாக ஒரு கும்பல் இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேண்டீன் ஒப்பந்ததாரர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ஏற்கனவே 3 பேரை (முத்துச்செல்வம், குணசேகரன், கார்த்திகேயன்) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முத்துச்செல்வம் கடந்த 12 ஆண்டுகளாகக் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தவர் என்பதால், அங்கு ஏற்கனவே இது போன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நந்தனம் கல்லூரிப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

கல்லூரி வளாகத்திற்குள் இச்சம்பவம் நடந்ததையடுத்து, தமிழக உயர்கல்வித் துறை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஒரு புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது: கல்லூரி கேண்டீன் ஊழியர்களின் பின்னணியைத் தீவிரமாகச் சோதிக்க வேண்டும். வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பிற்காகப் புகார்ப் பெட்டிகள் மற்றும் கவுன்சிலிங் மையங்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!