சிலிண்டர் விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும்... டிடிவி தினகரன் கண்டனம்!

 
டிடிவி தினகரன்

 மத்திய அரசு நேற்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

டிடிவி தினகரன்


சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நான்காண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது. 

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web