“ஓபிஎஸ் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்” - டிடிவி தினகரன்

 
டிடிவி தினகரன்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அண்மைக்காலச் செயல்பாடுகள் குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடையே பேசுகையில், ஓபிஎஸ் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்று தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியது மற்றும் ஓபிஎஸ்-க்கும் திமுக-வுக்கும் இடையே நிலவி வரும் ரகசிய உறவு குறித்த செய்திகள் அரசியலில் பேசுபொருளாகியுள்ளன. "ஓ.பன்னீர்செல்வம் தனக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டார். இதனால்தான் துரியோதனன் கூட்டத்திற்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வருகிறார்" என தினகரன் விமர்சித்தார்.

ஓபிஎஸ்

2015ம் ஆண்டிலேயே ஓபிஎஸ்-ஐப் பதவியில் இருந்து நீக்கியது சரியானது தான் என்பது இப்போது மக்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்றும், அவர் மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கூறினார்.

"தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் இப்போது அதர்மத்தின் பக்கம் நிற்கிறார். அதர்மத்தின் பக்கம் நின்றால் அழிவுதான் மிஞ்சும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, ராஜ்யசபா தேர்தலிலும் சரி, தான் போட்டியிடப் போவதில்லை என்று தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளை வெற்றி பெறச் செய்வதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ்

தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். வரும் தேர்தலில் இந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"திமுக எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் வரும் தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது. மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்" என்றவர், தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது குறித்துக் கேட்டபோது, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!