அமமுக தவெகவுடன் கூட்டணி?... டிடிவி தினகரன் பளிச் !

 
சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க முழு அதிகாரம் தினகரனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் எதிர்கால உத்திகள் குறித்தும் விவாதம் நடந்தது.

டிடிவி தினகரன்

கூட்டத்தில் பேசிய தினகரன், “75 ஆண்டுகால கட்சிகளுக்கு சளைக்காமல் அமமுக வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். எந்தக் கூட்டணியாக இருந்தாலும், அமமுக கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெறும்” என்று தெரிவித்தார். மேலும், “தேர்தல் நேரத்தில் எதிரி, துரோகி என பார்க்க தேவையில்லை. மக்கள் நலனே முக்கியம். நாம் கை காட்டுபவரே அடுத்த முதல்வராக வருவார்” என்றார்.

டிடிவி தினகரன், ஸ்டாலின்

மேலும், “வரும் தேர்தலில் அமமுக ஆளுங்கட்சியாக சட்டமன்றத்திற்கு செல்லும். கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுப்பவர்களுடனே கூட்டணி அமைக்கப்படும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்து, அதில் அமமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள்” என உற்சாகமாக பேசினார். தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கிய தீர்மானம், கட்சியின் ஒற்றுமையையும் 2026 தேர்தல் இலக்கையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!