அதானி மகனுக்கு திருமணம்.. வைர வியாபாரி மகளை கரம் பிடிக்கும் ஜீத் அதானி! ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்!

 
திவா ஜெய்மின் ஷா

உலக பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபரும், அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானியின் (Gautam Adani) மகன் ஜீத் அதானிக்கு (Jeet Adani) இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின் ஷாவுக்கும் (Diva Jaimin Shah), ஜீத் அதானிக்கும் இடையே நிச்சயதர்த்தம் நடந்துள்ளது.

மார்ச் 12 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திவா ஜெய்மின் ஷா

சி.தினேஷ் & கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல வைர வியாபாரியுமான ஜெய்மின் ஷாவின் மகள் தான் திவா ஜெய்மின் ஷா.
ஜீத் அதானி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மற்றும் அப்ளைய்டு சையின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். ஜீத் அதானி 2019 இல் அதானி குழும பணியில் சேர்ந்து, தற்போது அதானி குழுமத்தின் நிதி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.

அதானி குழுமத்தின் இணையதள தரவுகள் படி அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப்ஸ் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு சூப்பர்ஆப் உருவாக்கி வருகிறது. இந்த முக்கியமான திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.

திவா ஜெய்மின் ஷா

மிகவும் அமைதியாக நடந்து முடிந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். மேலும் நிச்சயதார்த்தம் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. ஜீத் அதானியும், திவாவும் வெளிர் நிறத்தில் அழகிய ஆடை அணிந்த படம் மட்டும் வெளியாகியுள்ளது.

கவுதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி ஏற்கெனவே பிரபல வழக்கறிஞர் சிரில் ஷ்ராஃபின் மகள் பரிதி ஷ்ராஃபை திருமணம் செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரண் அதானி தற்போது அதானி ஏர்போட்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web