நாளை தவெக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை... முழு வீச்சில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இன்னும் சில தினங்களே இருப்பதால் மக்கள் பண்டிகை தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் புது ஆடைகள், கிறிஸ்துமஸ் மரம் வாங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடத்தப்படுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள உள்ளார்.

இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (22.12.2025) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் விழா நடைபெறும் என தெரிவித்துள்ளார். மனிதநேயமும் நல்லிணக்கமும் வலியுறுத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு பெற்றவர்களே பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
